கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் படுகொலை..! காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறியாட்டம்..! ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சி..!

29 March 2021, 5:38 pm
Kashmir_Councilor_attacked_sopore_UpdateNews360
Quick Share

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு தீவிரவாத தாக்குதலில் சோப்பூரில் உள்ள நகராட்சி மன்றத்தின் கவுன்சிலர் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொரு கவுன்சிலர் காயமடைந்தார்.

சோப்பூரில் உள்ள நகராட்சி மன்ற அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு கவுன்சிலர்கள் மற்றும் பிரதேச வளர்ச்சிக் கவுன்சில் தலைவர் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

தீவிரவாதிகளின் தாக்குதலில், ரியாஸ் அகமது மற்றும் ஷம்ஸ்-உத்-தின் பியர் ஆகிய இரண்டு கவுன்சிலர்கள் மற்றும் ஷப்காத் அகமது எனும் போலீஸ்காரர் என மொத்தம் மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரியாஸ் மற்றும் ஷப்காத் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தாக்குதல் நடந்த உடனேயே, போலீஸ், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக ரீதியாக செயல்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி, காஷ்மீரில் நிலவும் ஜனநாயகத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் முழுமையாக முறியடிக்கப்பட்டு வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 19

0

0