தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை: தொண்டர்கள் கொண்டாட்டம்..!!

9 July 2021, 9:05 am
Quick Share

தெலங்கானா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறும் வகையில் ஷர்மிளா தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

jaganmohan reddy - updatenews360

இதையடுத்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அப்போது பேசப்பட்டது. இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு போட்டியாக ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகர ராவ் நிறைவேற்றாத காரணத்தினால் புதிய கட்சியை தொடங்கி தந்தையின் நல்லாட்சியை அமைக்கப் போவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Views: - 175

0

0