ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப்பெரிய சதி முறியடிப்பு..! ராணுவ வீரர்களுக்கு மோடி பாராட்டு..!

20 November 2020, 5:33 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

ஜம்மு புறநகரில் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள், ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். 26/11 மும்பை தாக்குதலின் நினைவு நாளை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளது.

சந்திப்பு முடிந்த உடனேயே, பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டுள்ள ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார்.

“பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளை வீழ்த்தியதும், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதும் அவர்களின் முயற்சிகள் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.” எனக் கூறினார்

“எங்கள் பாதுகாப்புப் படைகள் மீண்டும் மிகுந்த துணிச்சலையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றி. ஜம்மு காஷ்மீரில் அடிமட்ட அளவிலான ஜனநாயக நடைமுறைகளை குறிவைக்கும் ஒரு மோசமான சதியை அவர்கள் தோற்கடித்தனர்.” என்று பிரதமர் மோடி கூறினார்.

நக்ரோட்டா என்கவுன்டர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் மோடி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

நக்ரோட்டாவில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

நேற்று காலை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும் பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லாரி தொடர்பான தகவல்களைப் பெற்ற பின்னர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு முறியடித்தது குறிப்பிடத்தக்கது

Views: - 17

0

0