8 மாதங்களுக்கு முன் எல்லையில் காணாமல் போன ராணுவ வீரர்..! எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

17 August 2020, 6:11 pm
Army_Operation_UpdateNews360
Quick Share

காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, ஜனவரி மாதம் உத்தரகண்டைச் சேர்ந்த காணாமல் போன 11 கர்வால் ரைபிள்ஸ் வீரர் ராஜேந்திர சிங் நேகியின் சடலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்தனர்.

ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்ட செய்தி அவரது பட்டாலியனின் அதிகாரியால் அவரது மனைவியிடம் தெரிவிக்கப்பட்டதாக, அவரது உறவினர் தினேஷ் நேகி தெரிவித்தார்.

அவர் காணாமல் போன எட்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமையன்று பனி உருகிய பின்னர் நேகியின் உடல் மீட்கப்பட்டது என்றார். பல மாதங்களாக நேகியைக் கண்டுபிடிக்க முடியாதபோது, அவர் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டு, இந்த ஆண்டு மே மாதம் போர் விபத்து என்று அறிவிக்கப்பட்டது.

ராஜேந்திர நேகிக்கு, மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வீரரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, தியாகிக்கு வீர வணக்கம் தெரிவித்தார்.

பிரிந்த ஆத்மாவுக்கு அமைதியும், குடும்பத்திற்கு பலமும் கிடைக்க வேண்டும் என்று ராவத் பிரார்த்தனை செய்தார். மேலும் அரசாங்கம் குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் என்றார்.

Views: - 23

0

0