9 மாத கைக்குழந்தையை இரக்கமின்றி அடித்து உதைத்த கொடூரத்தாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 6:34 pm
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் 9 மாத கைக்குழந்தையை தாய் ஒருவர் கன்னத்தில் அறைந்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் பிரை கமீலா கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது. இவர், தனது குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தும் கொடூர காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், தனது மடியில் 9 மாத கைக்குழந்தையை வைத்திருக்கும் தாயின் அருகே, மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். இந்நிலையில் அழுத குழந்தையை பார்த்து முதலில் சிரித்த அதன் தாய், திடீரென ஆவேசமடைந்தவராக கழுத்து பகுதியில் இரு கைகளையும் நெருக்கி பிடித்து இறுக்கியுள்ளார். பின்னர், கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Views: - 605

0

0