காயம்பட்டு உயிருக்கு போராடிய சிறுத்தை…பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

18 October 2020, 9:11 am
cheeta - updatenews360
Quick Share

ஜம்மு-காஷ்மீர்: காயம்பட்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில், லடான் கிராமப்பகுதியில் சிறுத்தை ஒன்று காயத்துடன் உயிருக்கு போராடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் காயம்பட்டு கிடந்த சிறுத்தையை வலையில் வைத்து, தோளில் சுமந்து சென்றனர். இதனைதொடர்ந்து, ஜம்முவில் உள்ள மந்தா உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒப்படைக்கப்பட்டது.

சிறுத்தைக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.