“காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுதம் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை”..! மெகபூபா முப்தி சர்ச்சை..!

9 November 2020, 5:21 pm
mehbooba_mufti_updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தங்கள் கைகளில் துப்பாக்கியை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

“இளைஞர்களுக்கு வேலைகள் இல்லை. ஆயுதங்களை எடுப்பதை தவிர இளைஞர்களுக்கு வேறு வழியில்லை. பயங்கரவாத ஆட்சேர்ப்பு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் வேலை கிடைக்கிறது” என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.

மோடி அரசு வாஜ்பாய் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஜம்மு மாநிலம் காஷ்மீரை விட மோசமான நிலையில் உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

ஆர்ட்டிகிள் 370’இல், “எங்கள் சிறப்பு அந்தஸ்து அப்படியே இருக்கும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் இந்தியாவுடன் எங்களை இணைத்துக் கொண்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

“எங்கள் நிலம், வேலைகள் மற்றும் பிற விஷயங்கள் காஷ்மீர் மக்களுக்கு இருக்கும். அது மற்றவர்களுக்கானது அல்ல. 370’வது ஆர்ட்டிக்கிளை ரத்து செய்துள்ள பிறகு இருள் பள்ளத்தாக்கையும் ஜம்முவையும் சூழ்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மோதலுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றும் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதே பிடிபியின் நிலைப்பாடு என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 26

0

0