ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை : ராணுவத்தினர் குவிப்பு..!

22 September 2020, 11:11 am
Army_Operation_UpdateNews360
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

பட்காம் மாவட்டத்தில் சரார் இ சரிப் என்னும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.