ஜம்மு காஷ்மீர் எல்லையில் நிலவும் பதட்டம் : ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!

2 September 2020, 11:17 am
Quick Share

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அத்து மீறி எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

மறைந்திருந்து வேகு நேரம் நடத்தப்பட்ட தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

இதேபோல், அதே பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கு குழி இருப்பதாகவும், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட புட்காம் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 6

0

0