40 கோடியை கடந்த ஜன்தன் திட்ட வங்கி கணக்குகள்…! மத்திய அரசு அபாரம்

3 August 2020, 9:24 pm
Quick Share

டெல்லி: ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியவர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்திருக்கிறது.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது தான் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம். வங்கியின் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டியது இல்லை.

இந்த கணக்கு தொடங்கப்பட முக்கிய காரணம் அரசின் பணப்பலன்கள் எவ்வித இடையூறும் இன்றி நேரடியாக மக்களை சென்றடைவது என்பது தான். இந்த திட்டத்தில் இதுவரை 40.05 கோடி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ரூ.1.30 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

மிக வெற்றிகரமான திட்டமாக இந்த திட்டத்தில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, பயனாளிகளுக்கான விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது. ஜன்தன் கணக்கு வைத்துள்ளோர்  பணம் இல்லாமலே ரூ.10 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் பெறும் வசதியும் அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0