4வது கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஆக., மாதத்திற்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

15 July 2021, 8:42 pm
dharmendra-pradhan-updatenews360
Quick Share

டெல்லி : 4வது கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “4-ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வை 7.32 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு ஆக., 24 ம் தேதி முதல் செப்., 2 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக ஜூலை 20 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ம் கட்ட தேர்விற்கும் 4 ம் கட்ட தேர்விற்கும் இடையே போதிய கால இடைவெளி தேவை என தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 155

0

0