12’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி..! இந்த ஆண்டு மதிப்பெண் கட்டாயமில்லை..! மத்திய கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

19 January 2021, 5:15 pm
Ramesh_Pokhriyal_UpdateNews360
Quick Share

2021 ஜே.இ.இ மெயின் தேர்வு எழுத 12’ஆம் வகுப்பில் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

12’ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, எஸ்.பி.ஏ மற்றும் பிற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என இருந்த நிலையை இந்த ஆண்டு ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் இன்று முடிவு செய்தது. 

இந்த தளர்வு மூலம், 12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 75%’க்கும் குறைவாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதும் தகுதியைப் பெறுகின்றனர்.

முன்னதாக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு, 12’ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் எனும் தகுதி அளவுகோலை ரத்து செய்வதாக பொக்ரியால் முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் இந்த அறிவிப்பு வந்துள்ளதை மாணவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ-மெயின்ஸ், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதித் தேர்வாகக் கருதப்படுகிறது.

Views: - 0

0

0