கொரோனாவால் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

4 May 2021, 4:15 pm
JEE_Main_Updatenews360
Quick Share

இந்த மாதம் நடக்கவிருந்த ஜே.இ.இ மெயின் 2021 தேர்வு நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார். திருத்தப்பட்ட தேதிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

ஜேஇஇ மெயின் 2021 மே தேர்வு ஒத்திவைப்பு குறித்து ட்வீட் வெளியிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர், “கொரோனாவின் தற்போதைய நிலைமையைப் பார்த்து, மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, ஜேஇஇ (முதன்மை) – மே 2021 அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் என்.டி.ஏவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா காரணமாக ஏப்ரல் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. மே மாத தேர்வுக்கான பதிவை என்.டி.ஏ மீண்டும் திறக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது தேசிய தேர்வு முகமை அதை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

ஜே.இ.இ மெயின் 2021 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதுவரை, சுமார் 12 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு வந்துள்ளனர். பலர் இரண்டாவது முயற்சியாக  தயாராகி வரும் நிலையில், ஜே.இ.இ மெயின் 2021 தேர்வில் இதுவரை தோன்றாத லட்சக்கணக்கான மாணவர்கள் இன்னும் உள்ளனர்.

ஜேஇஇ மெயின் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இதற்கடுத்து நடக்க இருக்கும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஜூலை 3 ஆம் தேதி இந்த தேர்வு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தாலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் முடிந்த பிறகு தான் இது நடத்தப்படும் என்பதால் ஜூலை 3 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பில்லை என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Views: - 83

0

0

Leave a Reply