கூட்டு பாலியல் பலாத்காரம்..! அந்தரங்க உறுப்புகள் சிதைப்பு..! 50 வயது விதவைக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்..!

Author: Sekar
9 January 2021, 11:40 am
Woman_Rape_UpdateNews360
Quick Share

50 வயதான விதவை பெண் ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹண்டர்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் உள்ள கோப்னா கிராமத்தில் நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ரிஷாப் ஜா தெரிவித்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், விதவையின் வீட்டிற்குள் நுழைந்து, தனியாக வசித்து வந்த அவரை கூட்டு பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்தரங்க உறுப்புகளில் எஃகு கண்ணாடியைச் செருகி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது நபரைக் கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான நபர் ஹண்டர்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவ அலுவலர் டாக்டர் வேத் பிரகாஷ் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குச் சென்ற 50 வயது பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதேபோன்ற மற்றொரு கொடூரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 57

0

0