காதல் திருமணம் செய்த தம்பதி..! நிர்வாணமாக இழுத்துச் சென்று துன்புறுத்திய கிராமத்தினர்..!

27 September 2020, 3:39 pm
Police_UpdateNews360 (2)
Quick Share

ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் முழு சம்பவத்தின் வீடியோவையும் பதிவு செய்த நிலையில், இது சமூக ஊடக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாஹிப்கஞ்ச் பகுதியில் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்த கிராமவாசிகள் தம்பதியினரை பிடித்து, கிராமத்தில் நிர்வாணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.   

அவர்கள் காதல் திருமணம் செய்த பெண்ணிடம் தவறாகவும் நடந்துள்ளனர். பின்னர், கிராமத்து பஞ்சாயத்து ஒன்று கூடி அவர்களுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.

இந்த சம்பவம் குறித்த தகவலைப் பெற்ற போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகளால் படுகொலை செய்யப்படவிருந்த ஆணையும் பெண்ணையும் காப்பாற்றினர். 

துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமத் குமார் மிஸ்ரா, “கிராம மக்கள் அந்த நபருக்கு அபராதம் விதிக்க விரும்பினர். அவர்களும் அந்தப் பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டனர். எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், நாங்கள் தம்பதியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம்.” எனத் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 6

0

0