முதல் நாளிலேயே 155 பேர் கண்டுபிடிப்பு..! ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியாக்களை தேடும் பணி தீவிரம்..!

7 March 2021, 10:27 am
Rohingya_Refugess_India_UpdateNews360
Quick Share

இந்தியாவில் தங்கியிருந்த 155 சட்டவிரோத ரோஹிங்கியா குடியேறியவர்கள் ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருக்காமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்களை கண்டறியும் பணி ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடியேறியவர்களுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) வழங்கிய அடையாள அட்டை உள்ளதா என்பதை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

இதற்கான சரிபார்ப்பு செயல்முறை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தால் நேற்று தொடங்கப்பட்டது. ஜம்முவில் தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்கள் பயோமெட்ரிக் மற்றும் தங்கியிருக்கும் இடம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம்களின் சரிபார்ப்பு செயல்முறை உயர் பாதுகாப்புக்கு மத்தியில் எம்ஏஎம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கொரோனா சோதனையை நடத்திய பின்னர் நாங்கள் படிவங்களை பூர்த்தி செய்தோம். எங்கள் கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று மியான்மர் நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹனன் ஊடகங்களிடம் கூறினார்.

Views: - 20

0

0