ஜம்மு காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டர்..! பாதுகாப்புப் படையினர் அதிரடி..!

11 May 2021, 1:16 pm
Jammu_Kashmir_Encounter_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் கோமர்நாக் பகுதியில் உள்ள வைலூவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுவரை பாதுகாப்புப் படையினரோ அல்லது பொதுமக்கள் தரப்பிலோ எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உள்ளிட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முழு எல்லையிலும் அமைதியை கடைபிடிப்பதாக இருதரப்பு ராணுவமும் கடந்த பிப்ரவரி இறுதியில் ஒப்புக்கொண்ட பிறகு, எல்லையில் அமைதி நிலவினாலும், ஜம்மு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத வலையமைப்பை முழுமையாக ஒழிக்க மாநில போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 114

0

0