ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டு வீச்சு..! 6 பொதுமக்கள் படுகாயம்..!

31 August 2020, 4:08 pm
Security_Forces_Jammu_Kashmir_UpdateNews360
Quick Share

பாரமுல்லா மாவட்டத்தில் இராணுவ வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் இன்று 6 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த குண்டு இலக்கை சரியாக அடையாமல் சாலையில் வெடித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

“பாரமுல்லாவில் இன்று இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினர். ஆனால் கைக்குண்டு வாகனத்தைத் தவறவிட்டு சாலையில் வெடித்தது. அந்த இடத்தில் இருந்த 6 பொதுமக்கள் காயமடைந்தனர் ”என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் ஒரு காவல் நிலையத்தை பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளால் தாக்கிய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. நேற்றைய சம்பவத்தில் உயிர் இழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.

நேற்றைய சம்பவம் இரவு 9.25 மணியளவில் வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் சோபூர் பகுதியில் உள்ள வார்போரா காவல் நிலையத்தில் நடந்தது. தாக்குதலைத் தொடர்ந்து, காவல்துறையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Views: - 4

0

0