போலி அடையாள அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த மர்ம நபர்..! நாடாளுமன்றத்தைத் தாக்க சதித்திட்டமா..?
26 August 2020, 1:48 pmடெல்லியின் விஜய் சௌக்கிலிருந்து சந்தேகத்திற்குரிய நபரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வசிப்பவர் எனக் கூறும் அந்த நபர், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றித் திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பாக சிஆர்பிஎஃப் வீரர்களால் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது ஆரம்ப விசாரணையின் போது, அந்த நபர் தன்னைப் பற்றி சிஆர்பிஎஃப் வீரர்களிடம் தவறான தகவல்களைக் கொடுத்தார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு ஆவணம், ரகசிய குறியீடுகள் மூலம் சில தகவல்களைக் கொண்டுள்ளது.
அவரிடமிருந்து ஒரு ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய இரு அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு ஐடிகளும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஓட்டுநர் உரிமத்தில் ஃபிர்தவுஸ் எனும் பெயரும், ஆதார் அட்டையில் மன்சூர் அகமது அஹாங்கர் எனும் பெயரும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நபர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புட்கம் மாவட்டத்தில் உள்ள ராட்சூன் பீர்வாவைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து ஒரு பையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட நபர் தனது அறிக்கைகளை தொடர்ந்து மாற்றி வருவது அவரைப் பற்றி மேலும் சந்தேகத்தைத் தூண்டுவதாக உள்ளது.
முதலில், அவர் 2016’இல் டெல்லிக்கு வந்ததாகக் கூறினார். பின்னர் அவர் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது தேசிய தலைநகருக்கு வந்ததாகக் கூறினார். அன்றிலிருந்து அவர் டெல்லியில் தங்கியிருப்பதாக சிஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த நபரின் உண்மையான அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் முதலில் ஜாமியா வட்டாரத்தில் தங்கியிருந்தார். பின்னர் நிஜாமுதீனில் உள்ள ஜும்மா மசூதி பகுதிக்கு அருகில் வசித்துள்ளார்.
அவர் இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நாடாளுமன்ற வளாக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரைப் பற்றிய தகவல்கள் வேறு பல பாதுகாப்பு அமைப்புகளுடனும் பகிரப்படுகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் டெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்சா என அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், காஷ்மீரைத் தாண்டி எந்த ஒரு குண்டுவெடிப்பையும் நிகழ்த்த முடியாத தீவிரவாதிகள், 2001 பாராளுமன்ற தாக்குதலைப் போல் மற்றொரு தாக்குதலை நிகழ்த்த சதித்திட்டம் தீஎட்டப்படுகிறதா என சந்தேகம் கொள்ளும் வகையில் மர்ம நபரின் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
0
0