விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக பேரணியா..? பாஜக தொண்டர்களை குண்டு வீசித் தாக்கிய திரிணாமுல் கட்சியினர்..!

4 October 2020, 11:27 am
TMC_Attacks_BJP_Members_UpdateNews360
Quick Share

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாய சீர்திருத்த மசோதாக்களை அமல்படுத்துவது தொடர்பாக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் விவசாயிகளிடையே அச்சத்தை உருவாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த மசோதாவின் விதிகள் குறித்த தகவல்களை பரப்புவதற்காக பாஜக மாநிலம் தழுவிய பேரணிகளை நடத்தியது.

நேற்று நடத்தப்பட்ட இந்த பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தொண்டர்களால் தெற்கு 24 பர்கானாக்களின் பட்ஜ் பட்ஜ் பகுதியில் உள்ள நோடகாலி கிராமத்தில் ஒரு பாஜக பேரணி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக தொண்டர்கள் பவாலியில் உள்ள பிளாக் எண் -1 முதல் பட்ஜ் பட்ஜில் சத்யபிர்தாலா வரை தங்கள் பேரணியைத் தொடங்கினர். ஊர்வலம் ஷாகர் பஜார் வழியாக சென்றபோது, கட்சி உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

விரைவில், இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் வெடித்தன. இதையடுத்து அந்த பகுதியில் கல் வீசுதல் மற்றும் குண்டுவெடிப்பு என வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தொண்டர்கள் ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டதாக டிஎம்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக ஆத்திரமூட்டல் ஏற்பட்டது. அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டபோது, பாஜக தொண்டர்கள் அதை நிறுத்த மறுத்தது, வன்முறை மோதலுக்கு வழிவகுத்ததாக அவர்கள் கூறினர்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் பாஜக தொண்டர்கள் தங்கள் கட்சி அலுவலகங்களில் ஒன்றை அழித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, ஒரு சிலரை கைது வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதில் டி.எம்.சி தொண்டர்கள் பாஜக ஆதரவாளர்களை துரத்துவதைக் காணலாம்.

இந்த சம்பவம் நடந்தபோது, மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கிழக்கு மிட்னாபூரில் ஒரு பேரணிக்கு தலைமை தாங்கினார். இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த அவர், “பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பட்ஜ் பட்ஜில் ஒரு பேரணியில் பங்கேற்றபோது டிஎம்சி குண்டர்களால் தாக்கப்பட்டனர். வெடிகுண்டுகள் மற்றும் புல்லட் ஷாட்கள் வீசப்பட்டன. காரியகர்த்தாக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன. பெண் காரியகர்த்தாக்கள் துன்புறுத்தப்பட்டனர். ஜனநாயகம் எங்கே?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் காயமடைந்த பாஜக தொண்டர், இரத்தத்தில் நனைந்து, “பாஜகவை ஆதரித்ததற்காக நாங்கள் தண்டிக்கப்படுகிறோமா?” என விளாசியுள்ளார்.

விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், திரிணாமுல் கட்சியினர் தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபடுவது மாநில மக்களிடையே கட்சிக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என திரிணாமுல் தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Views: - 0

0

0