ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் சீண்டல் ஆகாது: சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா ராஜினாமா…இதுதான் காரணமா?

Author: Rajesh
11 February 2022, 5:12 pm
Quick Share

மும்பை: பாலியல் குற்ற வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா செய்தார்.

மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் பதவிகாலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இவரது பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் இதுவரை எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. மேலும்,கூடுதல் நீதிபதியாக இருக்கும் நீதிபதி அபய் அஹுஜாவின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி அஹுஜாவின் பதவிக்காலம் மார்ச் 2022 இல் முடிவடைகிறது. பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டவுடன், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 52 நிரந்தர நீதிபதிகளும் 8 கூடுதல் நீதிபதிகளும் இருப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தது. எனவே, பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பாக, நீதிபதி புஷ்பா கணேடிவாலா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருந்தவர் புஷ்பா கணேடிவாலா. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி கணேடிவாலா அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதேபோல், அதே மாதத்தில் அவர் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, ஜனவரி 19, 2021 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை தீண்டி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேடிவாலா, சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது எனவும், சிறுமியின் கையைப் பிடிப்பதும்,பேன்ட் ‘ஜிப்’ திறந்திருப்பதும் பாலியல் அத்துமீறலாகாது என சர்ச்சைக்குரிய கருத்தையும் இவர் தெரிவித்திருந்தார்.

Views: - 967

0

0