கண்ணை மறைத்த காதல்: சீனியரை நிர்வாணமாக்கி தாக்கிய ஜுனியர் கேங்க்!!!

Author: Aarthi
5 October 2020, 4:32 pm
crime - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம்: காசியாபாத்தில் காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவரை நிர்வாணமாக்கி 10ம் வகுப்பு மாணவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 17 வயதான அந்த மாணவர் மாணவியை சந்திக்க தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார்.

அப்போது அங்கு வந்த சிறுமியுடன் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் சிலர் 12ம் வகுப்பு மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் 12ம் வகுப்பு மாணவரை கட்டாயப்படுத்தி காரில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

10ம் வகுப்பு சிறுவர்கள் 12ம் வகுப்பு மாணவனின் வாயில் துணியை அடைத்து, அவரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பித்த 12ம் வகுப்பு மாணவன் போலீசில் புகார் அளித்துள்ளான்.

மேலும்,குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தாக்குதலின் வீடியோவைப் பதிவுசெய்ததாகவும், அவர் பள்ளியின் சிறுமியுடன் உறவு கொண்டிருந்ததாக ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 29

0

0