இதை மட்டும் செய்யுங்க… என்னோட ஆதரவு உங்களுக்குத்தான் : பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிரசாந்த் கிஷோர் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 9:08 pm
Nitish and PK - Updatenews360
Quick Share

பீகாரில் நிதிஷ் -பா.,ஜ., கூட்டணி ஆட்சி முறிந்து ஆர்ஜேடி காங்., சி..பி.ஐ., உள்ளிட்ட பிற கட்சிகளுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் முதல்வர் நிதிஷ்குமார்.

ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். பீகாரில் அடுத்த சட்டபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவின்போது முதல்வர் நிதிஷ்குமார் அடுத்து வரும் ஆண்டுகளில் 5 முதல் 10 லட்சம் பேருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என கூறி இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் பிரசார வியூகரான பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளபடி அடுத்து வரும் இரண்டாண்டுகளில் 5 லட்சம் முதல் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை நிதிஷ் வழங்கினால் என்னுடைய ஜன் சூரஜ் அபியான் பிரச்சாரத்தை வாபஸ்பெற்று நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளேன்.

எதிர்காலத்தில் பீகார் மாநிலம் மேலும் பல அரசியல் எழுச்சிகளை சந்திக்கும் என கூறினார்.

Views: - 248

0

0