நிர்பயா வழக்கு விசாரணையில் ஷாக்..!பெண் நீதிபதிக்கு நேர்ந்த சம்பவம்..! அலறிய ஊழியர்கள்…!

14 February 2020, 4:45 pm
Quick Share

டெல்லி: நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழ, நீதிமன்ற வளாகமே பரபரப்புக்கு உள்ளானது.

நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட  4 பேரும் தனித்தனியாக சட்ட வழிகளை பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்தும் வேலைகளை செய்து வருகின்றன.

எனவே, அவர்களை தனித்தனி நாள்களில் தூக்கிலிட அனுமதிகோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பிரபல பெண் நீதிபதி பானுமதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். பதற்றம் அடைந்த பிற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற ஊழியர்களும் அவரை மயக்கம் தெளியச் செய்தனர்.

பின்னர் சக்கர நாற்காலியில் மருத்துவ சிகிச்சைக்காக பானுமதி அழைத்து செல்லப்பட்டார். நீதிபதி பானுமதி மயங்கி விழுந்ததால், மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply