பட்டு முகக் கவசம் கொண்ட பரிசுப்பெட்டகம்..! காதி நிறுவனம் வெளியீடு..! நிதின் கட்கரி பாராட்டு..!

1 August 2020, 5:10 pm
Kadhi_Face_Mask_Silk_UpdateNews360
Quick Share

காய் வினைத் தொழிலாளர்களின் பொருட்களை விற்கும் காதி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப் பெட்டியை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த பரிசுப்பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிசுப் பெட்டகத்தில் கை வேலைப்பாடுகள் மற்றும் அச்சுக்களுடன் கூடிய நான்கு பட்டு முகக் கவசங்கள் இருக்கும்.

கருப்பு நிரப்பில் கண்ணை கவரும் வகையில், பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் கூடிய காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டுள்ளது.

விழாக் காலங்கள் தொடர்ச்சியாக வரும் இந்த சமயத்தில், பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வேளையில், கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு இந்த முகக் கவசங்கள் கொண்ட பரிசுப்பெட்டி உள்ளது என நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

காதி இண்டஸ்ட்ரீஸ் ஆணையம் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிதின் கட்கரி, கொரோனா சமயத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க இது உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0