‘ஸ்விட்ச் டெல்லி’: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்திற்கு கமல்ஹாசன் வரவேற்பு..!!

7 February 2021, 11:25 am
arvind kamal - updatenews360
Quick Share

சென்னை: அரசு பயன்பாட்டுக்கான வாகனங்களை மின் வாகனமாக மாற்றுவதோடு மின் வாகனம் வாங்குவோருக்கு மானியம் அறிவித்த டெல்லி முதலமைச்சரின், ‘ஸ்விட்ச் டெல்லி’ திட்டத்திற்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, எனது நண்பரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பயன்பாட்டுக்கான கார்களை ஆறு மாதங்களுக்குள் மின் வாகனங்களாக மாற்றுகிறார். மாசு கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக, ‘ஸ்விட்ச் டெல்லி’ என்ற திட்டத்தை முன் வைத்திருக்கிறார்.

மின் வாகன பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, கட்சியின் பிரசார பணிகளை தீவிரப்படுத்தவும் மேடை பேச்சுகளை வலிமை பெற வைக்கவும், தலைமை நிலைய செயலர் சத்தியமூர்த்தியை, தலைமை நிலைய பரப்புரையாளராக கமல் நியமித்துள்ளார்.

Views: - 0

0

0