பாஜக பெண் தலைவரை ஐட்டம் எனக் கூறிய காங்கிரசின் கமல்நாத்..! வலுக்கும் எதிர்ப்புகள் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்குமா..?

18 October 2020, 6:01 pm
Kamal_Nath_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் அமைச்சரும் பாஜக பெண் தலைவர்களில் ஒருவருமான இமார்டி தேவியை அருவருக்கத்தக்க முறையில் கேலி செய்துள்ளார். அவரை ஒரு ஐட்டம் என கமல்நாத் குறிப்பிட்டது பாஜக மட்டுமல்லாது பொதுவான நபர்களிடையேயும் கடும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

“அவர் யார்? அவர் பெயர் என்ன? நீங்கள் அனைவரும் என்னை எச்சரித்திருக்க வேண்டும். என்ன ஒரு ஐட்டம்!” என கமல்நாத் நக்கலாக கூற, காங்கிரஸ் தொண்டர்கள் உரக்க இமார்டி தேவியின் பெயரைக் கூறுகின்றனர்.

மாநில சட்டசபைக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக இமார்டி தேவி வியாழக்கிழமை தப்ராவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமைச்சரவையில் இடம் கேட்டவர்களுக்கு கொடுக்க முடியாத நிலையில், அந்த எம்.எல்.ஏ.க்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க, கமல் நாத் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 5 லட்சம் செலுத்துவதாக அவர் இமார்டி தேவி குற்றம் சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர், இமார்டி தேவியை ஒரு விற்கப்பட்ட பொருள் என்று அழைத்தார். மேலும் அவர் தனது சொந்த தவறுகளிலிருந்து தப்பிக்க இதுபோன்று பேசி வருகிறார் எனக் கூறினார்.

நேற்று, கமல்நாத் எதிர்வரும் இடைத்தேர்தல்களுக்கான கட்சியின் அறிக்கையை வெளியிட்டார். பாஜக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை அப்போது தாக்கினார். கடந்த ஏழு மாதங்களில் ஒரு நிகழ்வைத் தொடங்குவதற்கான தேங்காயை உடைப்பதைத் தவிர அவர் வேறு எதுவும் செய்யவில்லை என்று சிவராஜ் சிங் சவுகானை விமர்சித்தார்.

“சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஏழு மாதங்களில் தேங்காய் உடைத்தல், தவறான அறிவிப்புகள் மற்றும் அடிக்கல் நாட்டுவது தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஒரு தேர்தல் வரும்போதெல்லாம், பாகிஸ்தான், சில நேரங்களில் சீனா, மக்கள் கவனத்தை திசை திருப்ப முன்னணியில் வருகிறது.

அவை மக்கள் கவனத்தை திசை திருப்புகின்றன. ஏனெனில், சிவராஜ் ஜி விலகல் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர்.” என்று கட்சியின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கமல் நாத் கூறினார்.

மத்திய பிரதேசத்தில் நடக்கும் சட்டசபைக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது ஆட்சி மாற்றத்திற்குக் கூட வழிவகுக்கும் என்பதால், இடைத் தேர்தலுக்காக தனியாக தேர்தல் அறிக்கையைக் கூட வெளியிடும் காங்கிரஸ் கட்சி, கமல்நாத்தின் ஐட்டம் கருத்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு பெண் தலைவரை மேடையிலேயே முதல்வராக இருந்த ஒருவர் ஐட்டம்  எனக் கூறியதைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே முணுமுணுக்கப்படுகிறது.

Leave a Reply