கண்டலேறு அணை திறப்பு : பூண்டி நீர்மட்டம் உயர்வு!!

Author: Udayachandran
8 October 2020, 2:02 pm
Krishna Dam - Updatenews360
Quick Share

ஆந்திரா : மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் 18 நாட்களில் 1 டிஎம்சி கொள்ளளவை பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கம் எட்டியது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின் படி கடந்த மாதம் 18-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 21-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பூண்டி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

இந்த நிலையில் பூண்டிக்கு வினாடிக்கு 697 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி அணையின் உயரம் 35 அடியாகும். தற்போது 26.65 அடியாக நீர்‌இருப்பு உள்ளது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்கலாம். கடந்த மாதம் 21-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 17 அடியாக இருந்தது. வெறும் 105 மில்லியன் கன அடி தண்ணீர் தான் இருப்பு இருந்தது. நீர்மட்டம் 26.65 அடியாக உயர்ந்தது.

1087 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் குடிவாரியத்துக்குடிநீர் வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா தண்ணீர் வரத்தால் பூண்டி நீர்மட்டம் கடந்த 18நாட்களில் 9 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Views: - 40

0

0