வாரிசு அரசியல்: உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம்…!!

27 October 2020, 9:28 am
gangana vs uthav - updatenews360
Quick Share

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு உத்தவ் தாக்கரே என நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இதுமட்டுமல்லாமல், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள் அதற்கு துரோகம் செய்கின்றனர் என கங்கனா ரணாவத் மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நடிகை கங்கனா ரணாவத் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என தாக்கி பேசியுள்ளார். மேலும் உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். நான் உங்களது மகன் வயது பெண். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படிதான் பேசுவீர்களா?. நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு கங்கனா ரணாவத் பேசியுள்ளார்.

Views: - 16

0

0