காங்கிரசில் இணைந்த கன்னையா குமார், குஜராத்தின் சுயேட்சை எம்எல்ஏ : டெல்லி அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 6:37 pm
congress Kanaihaiya - Updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமார், குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மோவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்ட கன்னையா குமாரும், குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

Image

இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கன்னையாகுமார் மற்றும் ஜிக்னேஷ் மோவானி ஆகியோர் இணைந்தனர். முன்னதாக டெல்லி ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர்.

Image

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கன்னையா குமார், நமது நாட்டுக்கு தற்போது பகத்சிங்கின் வீரமும், டாக்டர் அம்பேத்கரின் சமத்துவத்தின் சித்தாந்தமும், மகாத்மாக காந்தியின் ஒற்றுமையும் தேவை என கூறினார்.

Views: - 330

0

0