கரன்சி நோட்டுகளால் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அலங்காரம் : ரூ.5.15 கோடி பணத்தாள்கள் பயன்படுத்தி உருவாக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 1:00 pm
Currency Temple - Updatenews360
Quick Share

ஆந்திரா : நவராத்திரியை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி கோவில் ரூபாய் 5 கோடியே 15 லட்சம் கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில் தற்போது நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பத்து ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான 5 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை பயன்படுத்தி கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கரன்சி நோட்டுகள் தயாரித்த மாலைகள், கரன்சி நோட்டு கயிறுகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கரன்சி நோட்டுகள் நெல்லூர் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் என்ற போர்வையில் யாரும் கைவரிசை காட்டி விடாமல் தடுக்க கோவிலில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Views: - 354

0

0