ரவுடியுடன் தொடர்பில் இந்த 80 போலீஸ் அதிகாரிகள்..! சாட்டையை சுழற்ற தயாராகும் உ.பி. அரசு..!

5 November 2020, 6:22 pm
vikas_dubey_updatenews360
Quick Share

கான்பூரில் காவல்துறையினர் மீது விகாஸ் துபே ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) காவல்துறையினருக்கும், என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேக்கும் இடையிலான நெருக்கமான உறவை சுட்டிக்காட்டி, 80 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கான்பூரின் சௌபேபூர் பகுதியில் உள்ள பிக்ரு கிராமத்தில் எட்டு போலீசார் துபேயைக் கைது செய்யப் போயிருந்தபோது பதுங்கியிருந்து ஜூலை 3 நள்ளிரவுக்குப் பிறகு ரவுடி கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் உயிரிழந்தனர். பின்னர் ஜூலை 10’ம் தேதி ஒரு என்கவுண்டரில் விகாஸ் துபே கொல்லப்பட்டார்.

இதையடுத்து கைது செய்ய சென்ற காவல்துறை குறித்து முன்பே போலீஸ் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் விகாஸ் துபேவிற்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. 

“எஸ்ஐடி சமர்ப்பித்த 3,500 பக்க அறிக்கையில், 36 பரிந்துரைகளை வழங்கியுள்ளது மற்றும் குற்றவாளியுடன் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் 80 போலீசாரின் பங்கு குறித்த விவரங்களை அளித்துள்ளது” என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

அறிக்கையை வைத்து அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் கூறினார். எஸ்ஐடி அறிக்கை போலீஸ், நிர்வாக அதிகாரிகள் மற்றும் துபே ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான உறவை சுட்டிக்காட்டுகிறது.

பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள துபே மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டியதாக எஸ்ஐடி கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

கான்பூரின் சௌபேபூர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட போலீசார் மற்றும் மூத்த அதிகாரிகளின் அலட்சியம் தான் விகாஸ் துபே மற்றும் அவரது ஆட்களை நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தர முடியாமல் போனதற்குக் காரணம் எஸ்ஐடி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

விசாரணையின் போது, ​​கடந்த ஒரு வருடத்தில் துபேயின் மொபைல் போன் பதிவுகளையும் எஸ்ஐடி பகுப்பாய்வு செய்து, போலீசார் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து விரைவில் போலீஸ் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்கும் பணியில் உத்தரபிரதேச அரசு இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0

1 thought on “ரவுடியுடன் தொடர்பில் இந்த 80 போலீஸ் அதிகாரிகள்..! சாட்டையை சுழற்ற தயாராகும் உ.பி. அரசு..!

Comments are closed.