கார்கில் போர் வெற்றி தினம் : ஜம்மு காஷ்மீரில் உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!!!

By: Udayachandran
26 July 2021, 9:07 am
Kargil Day- Updatenews360
Quick Share

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி லடாக்கிலுள்ள நினைவுச் சின்னத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மரியாதை செலுத்தினார்.

1999-ஆம் ஆண்டு, கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை விரட்டியடித்ததன் 22-வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

Ram Nath Kovind

அப்போது இந்திய ராணுவத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேச இருக்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Views: - 201

0

0