இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் – சிவமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி தாலுகாவைச் சேர்ந்தவர் பிரதீக் கவுடா. இவர், பாஜக மாணவர் அமைப்பு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரதீக் கவுடாவை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.