தமிழகத்துக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடகா : நாளை பிரதமரை சந்திக்கிறார் எடியூரப்பா!!!

15 July 2021, 6:39 pm
Quick Share

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

மேகதாது விவகாரம் குறித்து பிரதமரிடம் முறையிட தமிழக அனைத்து கட்சி குழுவினர் டெல்லி செல்லும் நிலையில், நாளை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் டெல்லி பயணம் செய்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாதுவில் அணை அமைக்க உடனடியாக அனுமதி தரவேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வர் எடியூரப்பாயுடன், கர்நாடகா சட்டத்துறை அமைச்சரும் நாளை டெல்லி வருகிறார். நாளை மதியம் கர்நாடகாவில் இருந்து புறப்படும் முதல்வர் எடியூரப்பா மாலை பிரதமர் மோடியை சந்திக்கஉள்ளார். தமிழக அனைத்து கட்சி குழு நாளை மதியம் 1 மணி அளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர். பின்னர் , பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 125

0

0