கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!பாஜக தலைவர்களை ஆட்டிப் படைக்கும் தொற்று..!

3 August 2020, 7:32 am
BS_Yediyurappa_Updatenews360
Quick Share

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தான் நன்றாக இருந்தபோதிலும், மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக முதல்வர் கூறினார். தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சுய தனிமைப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

“எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் நன்றாக இருந்தாலும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நான் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து ட்வீட் செய்தார். அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.