விரைவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவி காலி..? கொளுத்திப் போட்ட கர்நாடக பாஜக எம்எல்ஏ..!

20 October 2020, 5:11 pm
bs_yediyurappa_updatenews360
Quick Share

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ பசங்கவுடா யட்னல் எடியூரப்பா முதல்வராக நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று கூறினார்.

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் செயல்பாடு குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மகிழ்ச்சியடையவில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய யட்னல், மாநிலத்தின் மூத்த தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பி.எஸ்.எடியூரப்பாவின் தலைமையில் மகிழ்ச்சியடையாததால் விரைவில் முதலமைச்சர் மாற்றப்படுவார் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த முதல்வர் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருப்பார் என்று கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், பசங்கவுடா யட்னல், வடக்கு கர்நாடகாவிலிருந்து ஏற்கனவே 100 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

முதல்வரை விமர்சித்த அவர், தனது சிவமோகா தொகுதிக்கு மட்டுமே நற்பணிகளை செய்து வருகிறார் என்றும், எடியூரப்பா வடக்கு கர்நாடக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள நிலைமையை மோசமாக கையாண்டதற்காக பாஜக எம்.எல்.ஏ. எடியூரப்பாவை மேலும் குற்றம் சாட்டினார்.

நவம்பர் 3’ம் தேதி நடைபெறவுள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றி குறித்து எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் 

“பாஜக வேட்பாளர்களின் வெற்றி குறித்து நாங்கள் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறோம். வெற்றியின் அளவை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதுதான் எங்கள் ஒரே கவலை” என்று எடியூரப்பா கூறினார்.

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது, இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Views: - 29

0

0