செப்டம்பரில் ஆன்லைன் கல்வி, அக்டோபரில் ஆஃப்லைன் கல்வி..! கல்லூரிகளை திறப்பதாக கர்நாடகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

26 August 2020, 6:04 pm
Exam_Corona_UpdateNews360
Quick Share

அக்டோபர் முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துணை முதலமைச்சரும் உயர்கல்வி அமைச்சருமான அஸ்வத் நாராயணா, பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் ஆன்லைன் வகுப்புகளுடன் தொடங்கும் என்றும், அக்டோபர் முதல் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

அக்டோபர் மாதத்தில் ஆஃப்லைன் வகுப்புகள் மற்றும் சில பட்டப்படிப்புகளை நடத்துவது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக கல்வித் துறை காத்திருக்கிறது.

அனைத்து கல்லூரிகளும் அக்டோபரில் தொடங்கும். அப்போது மாணவர்கள் நேரில் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே:

  • பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான கல்வி ஆண்டு செப்டம்பர் 1 முதல் ஆன்லைன் வகுப்புகளுடன் தொடங்கும்.
  • அக்டோபர் முதல் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
  • ஆஃப்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும், செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள சில பட்டப்படிப்பு தேர்வுகள் குறித்தும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு துறை காத்திருக்கிறது.
  • அனைத்து கல்லூரிகளும் அக்டோபரில் தொடங்கும். மாணவர்கள் நேரில் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகள் / பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
  • கல்வி ஆண்டு துவங்கியவுடன் அனைத்து இளங்கலை, டிப்ளோமா மற்றும் பொறியியல் மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்படும்.

Views: - 37

0

0