கர்நாடகாவில் அக்.25ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கர்நாடக அரசு அறிவிப்பு

Author: Udhayakumar Raman
18 October 2021, 9:36 pm
Quick Share

கர்நாடகா மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதி முதல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்து கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மதிப்பாய்வு செய்தது. அதன் அடிடப்படையில் மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்குவதற்கு அந்த குழு பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலத்தில் மேலும் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அளித்துள்ளது.அதன் விவரங்கள் பின்வருமாறு;-

கர்நாடகா மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதி முதல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதி.எனினும்,50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முக கவசத்தை கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.

1 முதல் 5 ஆம் வகுப்புகளை மீண்டும் திறப்பதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறையால் வழங்கப்படும்.

நீச்சல் குளங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.ஆனால்,இரண்டு தவணை தடுப்பூசி சான்று கட்டாயம்.


நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஓய்வு அறைகள், நடைபாதைகள் மற்றும் பிற பொதுவான பகுதிகள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

யுனைடெட் கிங்டமிலிருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நெறிமுறையைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட இந்திய அரசாங்க அமைச்சகத்தால் வழங்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இது தொடர்பான விபரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 223

0

0