சுகாதார அமைச்சருக்கு கொரோனா..! தனிமைப்படுத்திக் கொள்ள யோசனை

9 August 2020, 8:50 pm
Quick Share

பெங்களூரு: கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. பொதுமக்களை விட மக்கள் பிரதிநிதிகளை அதிகம் பாதித்து வருகிறது. 2 மாதங்களாக அதிக தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக 10 நாட்களாக கொரோனா தொற்று 5 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி  வருகிறது. இந் நிலையில் கர்நாடகா சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொற்று உறுதியான விஷயத்தை அவர் தமது டுவிட்டர் பதிவில் அறிவித்து உள்ளார்.

ஸ்ரீராமுலு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  இன்று காய்ச்சல் அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.

விரைவில் குணம் பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன். என்னை தொடர்பு கொண்ட, சந்தித்த அனைவரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 11

0

0