பிரசவத்திற்குச் சென்ற கர்ப்பிணிப்பெண்..! கார் விபத்திற்குள்ளாகி குடும்பமே பலியான சோகம்..!

27 September 2020, 3:53 pm
Karnataka_Car_Accident_UpdateNews360
Quick Share

கர்நாடகாவின் கலாபுராகியில் உள்ள சவலகி கிராமம் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் பயணித்த கார் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 25 வயது கர்ப்பிணிப் பெண் இர்பானா பேகம், ரூபியா பேகம், அபேதாபி , ஜெயச்சுனாபி, முனீர், முகமது அலி, சௌகத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கலாபுராகி நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் ஆலண்ட் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கலபுராகிக்கு வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசவம் பார்க்க குடும்பத்தோடு கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி 7 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0