திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் கோலாகலம்

29 November 2020, 10:04 pm
Quick Share

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு, கார்த்திகை தீப உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பௌர்ணமியின்போது கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகள், கோபுரங்கள், பலிபீடம், கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி இன்று கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு கோயிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் நூறு தீபங்கள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மூலவர் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையத்தை வலம் வந்து அங்குள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் கருவறையில் உள்ள அகண்ட தீபம், குலசேகர படி, துவாரபாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி,

தங்க கிணறு, யோக நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருமலை ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் 1,008 அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றினர். இதில் ஜீயர்கள், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, உறுப்பினர் சேகர் ரெட்டி , செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Views: - 59

0

0