காஷ்மீரில் துப்பாக்கி சூடு:2 தொழிலாளர்கள் படுகொலை

Author: Udhayakumar Raman
17 October 2021, 9:51 pm
Indian_Army_Anti_Terror_Ops_UpdateNews360
Quick Share

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார். இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர். இதேபோன்று புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், பீகாரை சேர்ந்த ராஜா ரேஷி தேவ்,ஜோகிந்தர் ரேஷி தேவ் என இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார். இவரும் பீகாரை சேர்ந்தவர்தான். காஷ்மீரில் தொடர்ந்து நடந்துவரும் துப்பாக்கிச்சூட்டால் மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.

Views: - 200

0

0