காஷ்மீரில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்த பள்ளிக்கூடம்..! ஆசிரியர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது..!

Author: Sekar
13 October 2020, 2:08 pm
Kashmir_Protest_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள ஒரு மதப் பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, சிராஜ்-உலூம் இமாம் சாஹிப் பள்ளி உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாக கூறப்படுகிறது. 

2019’ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் சஜ்ஜாத் பட் என்ற பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து எந்தவொரு நீதிமன்ற தலையீடும் இல்லாமல் ஒரு நபரை அதிகபட்சம் 2 ஆண்டுகள் தடுத்து வைக்க வகை செய்யும் கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் ஒரு சிஆர்பிஎஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியான நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜாத் பட் மேற்கூறிய பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றதாகக் கண்டறியப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தளவாட ஆதரவை வழங்கினர்.

காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார், பள்ளி தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்போடு இணைந்து செயல்பட்டதை உறுதிப்படுத்தினார்.

பி.எஸ்.ஏ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களில், அப்துல் அஹத் பட், ரூஃப் பட் மற்றும் முகமது யூசுப் வாணி ஆகியோர் அடங்குவர். மூவரையும் தவிர, பள்ளியின் சுமார் 6 ஆசிரியர்கள் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

தற்போது பள்ளியுடன் தொடர்புடைய சில நபர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக வினய் குமார் மேலும் கூறினார். இருப்பினும், தேவை ஏற்பட்டால், பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குறிப்பிட்ட பள்ளியின் 13 மாணவர்கள் பல பயங்கரவாத குழுக்களில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இது புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.

இந்த பள்ளியின் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் குல்கம், ஷோபியன் மற்றும் அனந்த்நாக் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்த மூன்று பகுதிகளும் பயங்கரவாதத்தின் மையமாகவும், ‘பல்வேறு பயங்கரவாத குழுக்களில் உள்ளூர் ஆட்களுக்கான உற்பத்தி மையமாகவும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 49

0

0