சூடான காற்றை சுவாசித்தால் கொரோனா நெருங்காது..? கேரள விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு..!

13 November 2020, 2:48 pm
Corona_Inhaler_Kerala_Scientist_UpdateNews360
Quick Share

தன்னை ஒரு விஞ்ஞானி எனக் கூறிக்கொள்ளும் 64 வயதான கேரள மனிதர், கொரோனா வைரசிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு சூடான காற்று இன்ஹேலரை உருவாக்கியுள்ளார். ஆனால் அதிகாரிகள் இந்த கண்டுபிடிப்புக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கயம்குளத்தைச் சேர்ந்த எம்.சி.டேவிட், தனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளுக்காக மீண்டும் மீண்டும் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “இந்த கண்டுபிடிப்பு என்பது ஒரு எளிய முகமூடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு பகுதி மூலம், ஒரு பேட்டரி மேலாண்மை அமைப்பு (பி.எம்.எஸ்) மூலம் வெப்பக் காற்றை சுவாசிக்க முடியும். இதுவரை நான் இதுபோன்ற 10 இன்ஹேலர்களை உருவாக்கியுள்ளேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் பயன்படுத்தினர்.

நான் முதலில் இதைப் பயன்படுத்தினேன். ஒரு நாள் நான் எழுந்தபோது எனக்கு எல்லா கொரோனா அறிகுறிகளும் இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இதை ஒரே ஒரு முறை பயன்படுத்திய பிறகு, எல்லா அறிகுறிகளும் மறைந்துவிட்டன. இதைப் பயன்படுத்தியவர்களிடமிருந்து நான் பெற்ற முடிவுகளும் சாதகமாக வந்துள்ளன.” என்று கூறினார்.

எனினும், ஐ.சி.எம்.ஆருக்கு இந்த கண்டுபிடிப்பை அனுப்பிய பின்னர் கடந்த 45 நாட்களாக முடிவுக்கு காத்திருப்பதாகக் கூறிய டேவிட், திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற நிறுவனங்களான ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜிக்கு மையத்திற்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

2013’ஆம் ஆண்டில் அரபு நாடுகளில் வேலையை விட்டு திரும்பியதிலிருந்து, அவர் முன்னணி நிறுவனங்களுடன் அளவு கணக்கெடுப்பாளர் மற்றும் மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். டேவிட் தனது கண்டுபிடிப்புகளுக்காக, தற்போது ஏழு காப்புரிமைகளைக் கொண்டுள்ளார்.

Views: - 19

0

0

1 thought on “சூடான காற்றை சுவாசித்தால் கொரோனா நெருங்காது..? கேரள விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு..!

Comments are closed.