ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை… ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை தாக்கிய காங்., நிர்வாகிகள்!!

Author: Babu Lakshmanan
16 September 2022, 5:11 pm
ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை… ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை தாக்கிய காங்., நிர்வாகிகள்!!
Quick Share

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாரத் ஜோடோ யாத்ரா என்ற ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, அண்மையில் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார். இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை… ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை தாக்கிய காங்., நிர்வாகிகள்!!

12 மாநிலங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும். தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தற்போது கேரளாவில் தொடரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எட்டாவது நாளாக இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரையை’ மீண்டும் தொடங்கினர்.

இதனிடையே, கேரளாவின் கொல்லத்தில் காய்கறி கடை உரிமையாளரை மிரட்டி அவரது கடையை சில காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நிதி வசூல் எனக் கூறி தன்னையும், உரிமையாளரையும் தாக்கியதாகவும், அவர்கள் 2,000 கேட்ட நிலையில், நான் ரூ.500 தான் கொடுக்க முடியும் எனக் கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவர்கள் கடையில் இருந்த காய்கறிகளை தூக்கி எறிந்து அராஜகம் செய்ததுடன், காங்கிரஸ் தொண்டர்கள் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும், கடையை சேதப்படுத்திய ஐந்து பேரில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எச். அனீஷ் கானும் அடங்குவார் என்று பவாஸ் கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Views: - 491

0

0