‘கேரள விமான விபத்து மீட்பு நடவடிக்கை’ – உதவிக்கு வந்த உள்ளூர் மக்கள் 10 பேருக்கு கொரோனா..!
19 August 2020, 1:59 pmகேரள விமான விபத்து மீட்பு பணிக்கு உதவிய 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கடந்த 7ஆம் தேதி தூபாயில் இருந்து 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது கேர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அம்மாநில அரசு, காவல்துறை மற்றும் நடிகர் சூர்யா, வைரமுத்து மற்றும் பொதுமக்கள் மக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காயமடைந்த பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீட்பு பணியில் ஈடுபட்ட சுமார் 80-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் 10 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை 47,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 176 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.