கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முதல்வரின் முன்னாள் நெருங்கிய உதவியாளரை மீண்டும் வறுத்தெடுத்த என்ஐஏ..!

25 September 2020, 10:07 am
Sivasankar_Swapna_Kerala_Gold_Smuggling_UpdateNews360
Quick Share

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளரான சிவசங்கரை, தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

அவரை நான்காவது முறையாக விசாரித்த போதிலும், ஸ்வப்னாவுடன் சிவசங்கரை ஒன்றாக என்ஐஏ விசாரித்தது இதுவே முதல் முறையாகும்.

தங்கக் கடத்தல் வழக்கு முதலில் வெளிவந்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித், துபாயில் இருந்து திருவனந்தபுரம் வரை இராஜதந்திர லக்கேஜ் மூலம் 30 கிலோ தங்கம் கடத்த வசதி செய்ததாக சுங்கத் துறையால் ஜூலை 5’ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும் பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவருமான ஸ்வப்னாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தபோது இந்த வழக்கு வேறு கோணத்தில் திரும்பியது. விசாரணையின் போது சிவசங்கருடனான அவரது தொடர்புகள் பின்னர் வெளிவந்தன. பின்னர் அவர் தனது வழிகாட்டியாக இருந்தார் என்பதை ஸ்வப்னா வெளிப்படுத்தினார்.

ஸ்வப்னாவுடனான அவரது தொடர்புகள் வெளிவந்த பின்னர், சிவசங்கரை பினராயி விஜயன் முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளரின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, பின்னர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தங்கள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், சிபிஐ மாநில செயலாளர் ராஜேந்திரன், மத்திய விசாரணை அமைப்புகள் குறித்து சந்தேகம் கொள்வதாகவும், அது மாநில செயலகத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதாகவும் இருப்பதாகக் கூறினார்.

Views: - 4

0

0