கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலுக்கும் எதிர்ப்புகள்..!

2 November 2020, 10:33 am
vijayan_resignation_updatenews360
Quick Share

கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுய லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, புதிய திட்டங்களைத் தொடங்குவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, கேரளாவில் உள்ள பினராயி விஜயன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. 

கேரள பாஜக நேற்று பினராயி விஜயனுக்கு எதிராக தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது. மேலும் பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவும் வலியுறுத்தியது.

பாஜகவின் கேரள தலைவர் கே.சுரேந்திரன், பினராயி விஜயன் நாட்டின் பணக்கார முதல்வர்களில் ஒருவர் என்றும், அவரது முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் ஸ்மார்ட் நகரங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக கருதப்படும் நிலங்களை தனியார் நபர்களுக்கு ஒப்படைக்க சதி செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

“கேரள கிரிக்கெட் சங்கம் பல லட்சங்களை மோசடி செய்துள்ளது. அதன் ஒரு பகுதி அரசாங்கத்திற்கும் கட்சித் தலைவருக்கும் சென்றுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லக்குட்டி கூறினார்.

“கேரளாவை துரோகிகளின் கோட்டையாக மாற்றிய முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தங்கக் கடத்தல் மற்றும் லைஃப் மிஷன் தவிர, கேரள சி.எம்.ஓவின் முதன்மை செயலாளராக இருந்த எம்.சிவசங்கர் செய்த பல அதிர்ச்சி மோசடிகள் வெளிவந்துள்ளன.” என அவர் கூறினார்.

1956’ஆம் ஆண்டில் கேரளா உருவானதிலிருந்து இதுபோன்ற தோல்வியுற்ற முதல்வரை கேரளா கண்டதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 14

0

0

1 thought on “கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலுக்கும் எதிர்ப்புகள்..!

Comments are closed.