சென்னையில் கோவிலில் வைத்து… பலமுறை பாலியல் உறவுக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்… ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதையால் சிக்கும் முக்கிய புள்ளிகள்..!!

Author: Babu Lakshmanan
11 October 2022, 10:09 am
Quick Share

திருவனந்தபுரம் : கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை பகீர் கிளப்பியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சல்களில் ரூ.13.82 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல இந்தியாவை உலுக்கியது. தூதரக பெயரில் இதுவரை எந்த குற்ற சம்பவங்களும் இந்தியாவில் நடைபெறாத நிலையில், தங்கக்கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பது பெரிதும் பேசப்பட்டது.

இந்தத் தங்கக்கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கை சுங்க இலாகா, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தின.

swapna suresh - updatenews360

இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தகவல்களையும் வெளியிட்டு வந்தார்.

swapna suresh - updatenews360

இந்த நிலையில், ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுய சரிதை புத்தகம் கேரள அரசியலில் அனலையும் கிளப்பியிருக்கிறது. இந்த புத்தகத்தில், சுயசரிதை புத்தகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.

swapna suresh - updatenews360

அதிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனினின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக, அந்த சுயசரிதையில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கோவிலில் வைத்து தாலி கட்டிய சிவசங்கர், நெற்றியில் குங்குமம் வைத்து விட்டதாகவும் தன்னை ஒருநாளும் பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ததாகவும் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

swapna suresh - updatenews360

அதேபோல், முன்னாள் அமைச்சர் ஒருவர் வாட்ஸ் அப் மூலமாக, தன்னை பாலியல் உறவுக்கு பலமுறை அழைத்து டார்ச்சர் செய்ததாகவும் சுயசரிதையில் எழுதியுள்ளார். தங்கக்கடத்தல் வழக்கில் கேரளாவே ஆட்டம் கண்டு வரும் நிலையில், தற்போது ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Views: - 413

0

0